உலக சூல்பை புற்றுநோய் விழிப்புணர்வு தினம் இன்று.
(World Ovarian Cancer Day)
( 08 மே 2020 )
சூல்பைப் புற்றுநோய் (ovarian cancer) என்பது சூல்பையில் தோன்றும் புற்றுநோயாகும். சூல்பை கருவுறத் தேவையான கருமுட்டையின் சேமிப்பிடமாகும். எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், குறைந்த அளவு டெஸ்ட்ரோஜன் முதலிய இயக்குநீரைச் சுரக்கின்றன. இரண்டு சூல்பைகள் உள்ளன. ஆரம்ப நிலையில் இதில் தோன்றும் புற்றுநோயினைக் கண்டு கொண்டால் குணம் பெறலாம். ஆனால் ஆரம்ப நிலையில் நோய் அறிகுறிகள் தெரிவதில்லை. வயிறு உப்புசம், வீக்கம், வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் போதல், விரைந்து இரைப்பை நிறைந்து விட்டது போன்ற உணர்வு காணப்படும்.
தாய், சகோதரி, முதலிய நெருங்கிய உறவில் மார்பகப்புற்று, சூல்பைப் புற்று அல்லது குடல் புற்று இருந்திருப்பின் அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மாதவிடாய் நின்றவர்களிடம் இந்நோய் அதிகளவில் காணப்படுகின்றது. வயதும் ஒரு முக்கிய காரணமாகும். இயக்குநீர் மருத்துவம் மேற்கொண்டவர்களிடமும் உடல் நிறை அதிகமுள்ளவர்களிடமும் இந்நோய் சற்றுக் கூடுதலாகவே உள்ளது. கருவுறாத நிலையும் காரணமாக உள்ளது.
0 Comments