சர்வதேச லூபஸ் விழிப்புணர்வு தினம் இன்று. (World Lupus Day) ( 10 மே 2020 )


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

சர்வதேச லூபஸ் விழிப்புணர்வு தினம் இன்று.

(World Lupus Day)

( 10 மே  2020 )



உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டு தோறும் மே 10 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும் எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமி தொற்று, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

Lupus erythematosus எனப்படும் இந்நோய் ரத்த திசுக்கள் பாதிப்பினால் உருவாவது,  இதன் துவக்கம்  சருமத்தில் பாதிப்புகள் தெரிய ஆரம்பிக்கும். தோல் எரிச்சல்  (ஸ்கின் பர்ன்), வாய்ப்புண், அல்சர் தொடங்கி உடலின் ஒவ்வொரு பாகங்களையும் தாக்கும் மோசமான நோயாகும்.

அளவுக்கு மீறிய மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும், கெமிக்கல் அலர்ஜி  போன்ற காரணங்களாலும்,  உடலில் உள்ள தசைகள் இறுகும். கன்னத்து தசை இறுகி கை, கால்கள் சுருங்க ஆரம்பிக்கும். இது படிப்படியாக  குடல், நுரையீரல், உணவு மண்டலம் உட்பட உள்ளுறுப்புகளையும் தாக்கி இறுதியில் மூளையை முடக்கிவிடும். துவக்கத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்கவில்லையென்றால் முகமெல்லாம்  கருத்துப் போய் விகாரமாக மாறிவிடும்.


Post a Comment

0 Comments