தமிழ் வழிக்கல்வியை அறிமுகம் செய்த
முன்னாள் மதராஸ் மாகாண கல்வி அமைச்சர்,
சுதந்திரப் போராட்டத் தலைவர்,
வழக்கறிஞர், தமிழறிஞர்.
“பத்மபூஷண்”
T.S. அவிநாசிலிங்கம் செட்டியார்
பிறந்த தினம் இன்று.
( 05 மே 1903 )
இவர் திருப்பூரைச் சேர்ந்தவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தவர். இந்திய ராஜாங்க சட்டமன்றத்திலும், மதராஸ் மாகாண கல்வி அமைச்சராகவும், பின்னர் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராகவும் இருந்தவர்.
1934 ம் ஆண்டு ஹரிசன நலவாழ்வு நிதிக்காக நன்கொடைகள் திரட்ட தமிழகம் வந்த மஹாத்மா காந்திக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். அந்த பயணத்தின் மொத்த செலவுகளையும் தாமே ஏற்றார்.
இவரது தமிழ்ச் சேவைகளில் சில:-
உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி அறிமுகம் செய்தார்.
திருக்குறளை பாடத்திட்டத்தினை பள்ளிகளில் அறிமுகம் செய்தார்.
புரட்சிக்கவி பாரதியாரின் பாடல்கள் தேசியமயமாக்கினார்.
தமிழ் வளர்ச்சி கழகம் நிறுவி அதன் மூலமாக தமிழில் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார்.
0 Comments