தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை Sir Jagadish Chandra Bose செயல்படுத்தி காட்டிய தினம் இன்று.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை

புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரும்,

கண்டுபிடிப்பாளருமான, 

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த

Sir Jagadish Chandra Bose

சர்வதேச விஞ்ஞானிகளுக்கு முன்

செயல்படுத்தி காட்டிய தினம் இன்று.

( 10 மே 1901 )



   ஜகதீஷ் சந்திரபோஸ் மிகச்சிறந்த இருநூல்களை இயற்றி உலகப்புகழ்பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்பது ஒருநூல்.

   தாவரங்களின் நரம்புச்செயலமைவு (The Nervous Mechanism of Plants) என்பது மற்றொருநூல். இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிறவிலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார். 

   மேலும் பரிசோதனை ஒன்றையும் ஜகதீஷ் சந்திரபோஸ் செய்து காட்டினார். புரோமைட் (Bromide) என்ற நச்சுத்தனிமம் எலிக்கு ஊசிமூலம் செலுத்தப்பட்டது, தாவரம் ஒன்றுக்கும் ஊசிமூலம் செலுத்தப்பட்டது, எலி, தாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக்கண்டு அறிவியல் உலகம் போஸ் அவர்களின் ஆராய்ச்சியை ஆரவாரத்துடன் கைதட்டிப் பாராட்டியது.


Post a Comment

0 Comments