கயானா - இந்தியர் வருகை தினம் இன்று.
( Guyana - Indian Arrival Day )
( 05 மே 2020 )
கயானா (Guyana) தென் அமெரிக்காவின் கரிபியன் கடல் பகுதியில் உள்ள ஒரு நாடாகும், பிரிட்டிஷார் இங்குள்ள சர்க்கரை ஆலைகளில் வேலை செய்வதற்காக, மே மாதம் 1838 ல் இந்தியாவிலுள்ள பீஹார், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து (ஆந்திர மக்கள் உள்பட) ஆட்களை அழைத்துச் சென்று கயானாவில் பணியிலமர்த்தினர். இந்நாளை நினைவுகூறும் வகையில் அங்குள்ளவர்களால் கயானா இந்தியர் வருகை தினம் கொண்டாடப்படுகிறது.
தற்போது அங்குள்ள இந்தியர்களை இந்தோ-கயானியர்கள் என அழைக்கின்றனர். 2012 ன் கணக்கெடுப்படி அங்கு வசிப்பவர்கள் விபரம்.
கிறிஸ்தவர்கள் – 63.9%
ஹிந்துக்கள் - 24.8%
இஸ்லாமியர்கள் - 06.8%
மற்றவர்கள் - 04.5%
0 Comments