இன்று தமிழ் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சி பிறந்த நாள். வெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர், ஓவியர் எனப் பன்முகம் கொண்டவர்.
சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர் டோ டாவின்சியைப் போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. மாலைமதியில் எழுதத்தொடங்கியது முதல் அவரது கடைசி புத்தகமாக ‘இசையானது’ வரை ஒவ்வொரு எழுத்துக்களும் ஆழமான கருத்துச் செறிவுகளை கொண்டவை.
குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத் துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்.
28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர்.
0 Comments