சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலக்ட்ரிக் டிராம்கள் ஓடின.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 மே 7, 1895ல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலக்ட்ரிக் டிராம்கள் ஓடின. 

அட்சிசன் அன் கோவின் ஆதரவில் இயங்கிய சென்னை டிராம்வேஸ் நிறுவனம் 1895 முதல் சென்னை நகரில் செயல்படத் தொடங்கியது. இந்தியாவிலேயே எலக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல் முறை. 

அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட "எலக்ட்ரிக் டிராம்கள்' அறிமுகமாகவில்லை. குதிரைகள் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை, மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தனர்.

அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக  துவக்கத்தில் சில நாட்கள் இலவச பயணம் அழைத்து சென்றனர். சேவையை தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். 

அதாவது மே 6-ந் தேதியுடன் ஓசிப் பயணம் முடிவு பெறுகிறது. 

மே-7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு ஒரு அணா என்ற அளவில், கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னையின் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. 

வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுன்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறி செல்லலாம். மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.


Post a Comment

0 Comments