டி. ஆர். ராஜகுமாரி பிறந்த தினம் இன்று.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 மே 5, 

டி. ஆர். ராஜகுமாரி பிறந்த தினம் இன்று.         


              

டி.ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 - செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்

ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை (சங்கீத) மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.

1939 ம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது

தமிழ்நாட்டின் ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் பெருமை பெற்றவர்,

பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். 

ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ”ஜிப்சி” நடனம் மற்றும் உச்ச கட்ட காட்சியில் ஆடிய ”டிரம்ஸ்” நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.


கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். 

எம். கே. தியாகராஜா பாகவதர், பி. யூ. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி. சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.


எம்.ஜி.ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37வது வயதில் 1959 ல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.

இவர் 1963 ல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை

இவர் நடித்த பிற படங்கள் சில: சிவகவி, ஹரிதாஸ், சந்திரலேகா, கிருஷ்ணபக்தி, பவளக்கொடி, தங்கமலை ரகசியம், மனோகரா ஆகியவை. வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் இவர் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். 1999 செப்டம்பர் 20 ம் தேதி காலமானார்.

ஆயினும், ஹரிதாஸ், சந்திரலேகா, மனோகரா ஆகிய படங்களின் மூலம் இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார்.


Post a Comment

0 Comments