மே 6- 1911
மிருதுளா சாராபாய் பிறந்த தினம் இன்று!
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், பிரபல தொழிலதிபர் அம்பாலா -- சரளாதேவி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் மிருதுளா சாராபாய்
அகமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மேலும் இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
விக்ரம் சாராபாய் அவர்களின் சகோதரி ஆவார்.
இவர் பள்ளிக்குப் போகாமலே இல்லத்தில் இருந்து கல்வி பயின்றார். இருப்பினும் 1928 ல் குஜராத் வித்யாபீத்தில் சேர்ந்து, இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் அழைப்பை அடுத்து அயல்நாட்டுப் பொருள்கள், நிறுவனங்கள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்கினார். எனவே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பை மறுத்தார்.
இருபது வயதில், அணிகலன்கள் ஏதுமின்றி, வெண்ணிற கதர் ஆடையில் இவர், காந்தியுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றது, இந்தியர்களை அதிசயிக்க வைத்தது. ஐந்து ஆண்டுகள், சிறை வாசம் அனுபவித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் பொதுச் செயலராக பணியாற்றினார். பால்ய விதவைகள் புறக்கணிக்கப்பட்ட பெண்கள், வயதான பெண்களுக்காக, விகாஸ் கிரகா என்ற அமைப்பைத் துவங்கினார். திருமணம் செய்து கொள்ளாமல், தன் வாழ்நாள் முழுவதையும், நாட்டுக்காக அர்ப்பணித்த மிருதுளா சாராபாய் பிறந்த தினம் இன்று!
0 Comments