மே 6, 1889 - பாரிஸ் நகரின் ஈபெல் டவர் பொது மக்கள் பார்வையிட திறந்துவிடப்பட்டது.
இந்த கோபுரத்தின் திறப்பு விழா 1889 மார்ச் 31 அன்று நடைபெற்றாலும் இதனை போது மக்கள் பார்வையிட மே 6 அன்றுதான் அனுமதிக்கப்பட்டனர்.. 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமான இக்கோபுரமானது 300 உருக்கு பணியாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்கு சட்டங்களை ஒன்றுடனொன்று பொருத்தி கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட காலத்தில், பொதுமக்களிடமிருந்து நிறைய எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். ஆனால் இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக் கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.
0 Comments