இன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD) நினைவு கூறப்பட்டு வருகிறது.
தீயணைக்கும் படையினரின் பணி துணிச்சல் மிக்கது பல நேரங்களில் ஆபத்து மிக்கதுமாகும். ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் மக்களால் பெரிதாக உணரப்படுவதில்லை.
இயற்கை சீற்றங்களினாலோ, விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக தங்களது உயிரைப் பணயமாக்கி தீப்பிழம்புகளிடையே புகுந்து போராடும் இவர்களின் சேவை அளப்பரியது.
பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி போற்றுதற்குரியது.
குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற விபரீதங்களின்போதும், இவர்களின் செயற்பாடானது பாராட்டத்தக்கது..
இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் உரிய அங்கீகாரத்தை வழங்கி இவர்களை நினைவுகூறுவது இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.
0 Comments