மே 4, 1799 – நான்காம் மைசூர்ப் போர்: திப்பு சுல்தான் ஆங்கிலேய படையினரால் கொல்லப்பட்டார்.
ஸ்ரீரங்கப்பட்டணம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தானின்அமைச்சர்கள் மீர் சதக் மற்றும் பூர்ணய்யா ஆங்கிலேயர்களிடம் விலை போய் மைசூர் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன.
ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட படையோடு எதிர்கொண்டு போராடி திப்பு சுல்தான் வீர மரணம் அடைந்தார்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் அண்டிப் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வீரம் காட்டி மடியலாம்” என்று தான் சொன்னபடியே தப்பித்து ஓடாமல் போரில் தீரம் காட்டி இறந்தார் அவர். போரில் எண்ணற்ற இழப்புகள், சூறையாடல்கள் எல்லாம் நிகழ்ந்த அந்த கணத்தில் ஒரு ஒப்பற்ற தலைவன் இறந்து போனதற்காக மைசூர் மக்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்.
வீர வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது . திப்பு எனும் மாவீரன் மறைந்த நாள் இன்று (மே நான்கு )
மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு திப்பு சுல்தான். - நூற்றி ஐம்பத்தாறு இந்து கோயில்களுக்கு அவரது ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதுமானது.
கோயில்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 அளிக்கப்பட்டது இவர் ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய உறவு பாராட்டினார் .
மூன்றாம் மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும் மராத்தியர் தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை சீரமைத்துக்கொடுத்தார்.
0 Comments