இன்று மே 3
வீரம் நிறைந்த மராட்டிய மன்னன்
#சத்ரபதி_சிவாஜி அவர்களின்
நினைவு தினம்....
17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மராட்டியர் எழுச்சி தென்னிந்திய வரலாற்றில் ஒர் முக்கிய நிகழ்வாகும்.
டெல்லி சுல்தானியரின் ஆட்சியை எதிர்த்து நின்று இந்துசமயம் இந்து தர்மம் என்பவற்றைத் தென்னகத்தில் பாதுகாத்தவர்கள் மராட்டியர்கள்.
இதற்கான அடித்தளத்தினை இட்டுக் கொடுத்தவன் மன்னன் ஷாஜிபான்ஸ்லே ஆவார்.
இந்த வரிசையில் மன்னன் சிவாஜியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார்
மராட்டிய மன்னர்களில் தலைசிறந்தவனான சிவாஜி மராட்டியர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தார்
இதனால்தான் வரலாற்று ஆசிரியர்கள் மகாராஷ்டிர நாட்டை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும் எனக் கூறுகின்றனர்.
மன்னன் சிவாஜி அரசியல் நடவடிக்கைiளில் மட்டுமின்றி சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும் வலுவான படையமைப்பினையும் கொண்டிருந்ததோடு சிறந்த ஆட்சியாளனாகவும் விளங்கினார்.
சிவாஜி சிவநேர் கோட்டையில் ஷாஜிக்கும் ஜீஜாபாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்(1630).
அன்னையின் அரவணைப்பிலே இளமைப்பருவத்தினைக் கழித்தாலும் இவரது கல்வி முன்னேற்றத்திற்கு தாதாஜி கொண்டதேவ் என்ற அந்தணன் பொறுப்பாயிருந்தார்.
அவருடைய மேற்பார்வையின் கீழ் ஒரு சீரிய இந்துவாக உருவாகிய சிவாஜி தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து ஆட்சி பீடமேறினார்.
மன்னன் சிவாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிர அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையினை அடைந்தது.
இவன் சமகாலத்தில் ஆங்கிலேயருக்கும் மொகாலயருக்கும் சவாலாக விளங்கினான். பொதுவாக மராட்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்களாகக் காணப்பட்டனர்.
பலம்மிக்க பேரரசாகக் காணப்பட்ட மொகாலயர் மீது அடிக்கடித் தாக்குதல்களை நடாத்தி அவர்களது ஆட்சியினைப் பலவீனப்படுத்தியிருந்தார்.
மற்றையது சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரின் பரவல் கூடுதலாகக் காணப்பட்டது.
அவர்கள் இந்தியாவினுள் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதனை விரும்பாத சிவாஜி ஆங்கிலேயரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.
இவன் தைரியசாலியாகவும் துணிவு நிரம்பிய வீரனாகவும் விளங்கினார்.
அயல் நாட்டுக் கொடுங்கோண்மை என்று கருதியவற்றை ஒழித்துக்கட்டித் தம் நாட்டின் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் கொண்டவனாய் வாழ்ந்தார்.
இளமைக் காலப்பயிற்சியும் சூழ்நிலையும் இணைந்து இளமை பொருந்திய மராட்டிய வீரனான அவரிடத்தில் ஒரு சுதந்திர இராச்சியத்தை நிறுவும் பேரார்வ உணர்ச்சியை தோன்றிவித்தது.
சிவாஜி தன்னுடைய ஆட்சிப் பரப்பினை விஸ்தரிப்பதற்காகப் பல போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்;.
எனவே 1674ஆம் ஆண்டு யூன் ஆறாம் திகதி தன்னை ஒரு மகாராஜாவாக மாற்றிக் கொள்ள விரும்பிய சிவாஜி சத்ரபதி மகாராஜா என்ற பட்டத்துடன் முடிசூடிக் கொண்டார்.
இவன் அரசியல் உலகில் துணிச்சலோடு கண்ட பல வெற்றிகளுடன் சிறந்த நிருவாகக் கட்டமைப்பினையும் ஏற்படுத்தினார்.
மேலும் இவனுடைய காலத்திற் மக்களிடையே சிறப்பான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த்து.
சிறந்த அரசனாகவும் நிர்வாகியாகவும் விளங்கிய சிவாஜி 1680களில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
இவன் சிறந்த ஆட்சியாளனாக விளங்கிய போதும் இவரைப் பற்றி விமர்சன ரீதியான கருத்துக்களும் வரலாற்று ஆசிரியர்களிடையே பேசப்படுகின்றது.
மேலும் கிருஷ்ணதேவராயர், இராஜேந்திரசோழன், அக்பர், ஒளரங்கசீவ், போன்ற மாபெரும் வீரர்களோடு ஒப்பிட்டால் சிவாஜியை இரண்டாம்தரப் போர்வீரர் என்றே கூறவேண்டும்.
ஏனெனில் பகைவன் வலிபடைத்திருந்தால் தந்திரத்தால் சாதித்துக் கொள்வதும் இன்றேல் வெளிப்படையாகப் போருக்குச் செல்வதும் இவருடைய இயல்பாகும்.
எது எவ்வாறிருந்த போதிலும் மராட்டிய மக்களை ஒன்றுபடுத்தி மராட்டிய பேரரசினை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும்.
எனவே தான் சத்திரபதி மகாராஜா எனப் போற்றப்படும் மன்னன் சிவாஜி தென்னிந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பிடித்தள்ளான் என்பதில் மாற்றுக்கருத்தக்கள் கிடையாது.
0 Comments