உலக பத்திரிகை சுதந்திர தினம்.... இன்று மே 3


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 இன்று மே 3 

உலக பத்திரிகை சுதந்திர தினம்....


உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்.

ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன

மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம்.

இந்நிலையிலேயே ஐக்கிய சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 19 ஆவது திருத்தத்தில் உள்ள பேச்சுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும் அவற்றை சர்வதேச நாடுகளுக்கு நினைவூட்டும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 03 ஆம் திகதி உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆபிரிக்கப் பத்திரகைகளால் கூட்டாக பத்திரகை சுதந்திர சாசனம் உருவாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது இது உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் பிரகடனப்படுத்தப்பட காரணமாய் அமைந்தது.

ஊடக சுதந்திரத்திற்காய் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு இன்றைய நாள் யுனெஸ்கோவினால் உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான விருது வழங்கப்படும்


Post a Comment

0 Comments