மே 3, 1939. அகில இந்திய பார்வர்ட் பிளாக் (All India Forward Bloc) எனப்படும் ஒரு தேசியவாத இடதுசாரி கட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது..
காந்திஜி உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் சுபாஷ் சந்திர போசுக்கு எற்பட்ட பல கருத்து வேறுபாடுகள் கரணமாக அக்கட்சியிலிருந்து விலகி போஸ் இந்த புதிய கட்சியைத் துவக்கினார். இது மேற்கு வங்காளத்தின்தலைநகர் (கல்கத்தா) கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. எனினும் தற்போது இக்கட்சியின் தலைமை அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இது ஆங்கிலேய அரசால் 1942ல் தடை செய்யப்பட்டது.1939ல் பார்வார்டு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றும் வெளிவந்தது. இக்கட்சியை போஸ் துவக்கும்போது அவருக்கு தோள் கொடுத்து துணையாயிருந்த முக்கிய தலைவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் முத்துராமலிங்க தேவர் ஆவார். அவரே இக்கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவராக 1963 வரை இருந்தார்.இக்கட்சியின் தற்போதைய அகில இந்தியபொதுச் செயலாளர் தேவப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. இக்கட்சிக்கொடியில் புலி சின்னம் இருந்தபோதிலும் இக்கட்சியின் தேர்தல் சின்னம் சிங்கம் ஆகும்.
0 Comments